பதிவு செய்த நாள்
21
பிப்
2019
02:02
ராஜகுளம் : ராஜகுளம் கிராமத்தில், தெப்போற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (பிப்., 19ல்) காலை, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம், இலுப்பப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு சென்று, ராஜகுளம் வந்து அடைந்தார். மாலையில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு வரதராஜப்பெருமாள் ராஜகுளம் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்தார். கோவிந்தா... கோவிந்தா என, கோஷம் எழுப்பி பெருமாளை வழிபட்டனர்.