காஞ்சிபுரம்: மாசி மகத்தையொட்டி, காஞ்சிபுரம் குமர கோட்டத்தில், வள்ளி, தெய்வானை யருடன், முருகப்பெருமான் ராஜ வீதிகளில் உலா வந்தார்.
இதை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு, வள்ளி, தெய்வானையுடன், மலர் அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி கேடயத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார்.