பதிவு செய்த நாள்
22
பிப்
2019
02:02
புதுச்சேரி: புதுச்சேரி மகாயோகம் சார்பில், சித்தர் முறை யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.புதுச்சேரியில் இயங்கி வரும் மகாயோகம் சார்பில், ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் சித்தர் முறை அருட்பெருஞ்ஜோதி யாகம் மற்றும் அகன்ற ஒளியேற்றும் பூஜை, லாஸ்பேட்டை அசோக் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
யாகங்களை, உலக யோகா சாதனையாளர் ரஞ்சனா ரிஷி, யோகிகள் சுரேஷ், பலராம் ஆகியோர் நடத்தினர். இதில், மகாயோகத்தை சேர்ந்தவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். முன்னதாக, சிறுவர், சிறுமியரின் யோகா நிகழ்ச்சி நடந்தது.
இதில், 50க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்தனர். ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, பாஸ்கர் மற்றும் புதுச்சேரி மகா யோகத்தினர் செய்திருந்தனர்.