காரைக்கால் நித்திய கல்யான பெருமாள் தெப்பத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2019 02:02
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நடந்த தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி காலை, மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது.தெப்ப திருவிழாவையொட்டி நேற்று காலை விசேஷ திருமஞ்சனம், தெப்ப புண்யாஹ வாசனம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி சமேதராக பெருமாள் சந்திரபுஷ்கரணி என்று அழைக்கப்படும் தெப்ப குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி விக்ரந்தராஜா, அறங்காவலர் குழு தலைவர் கேசவன், செயலாளர் பக்கிரிசாமி, துணை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினர் செய்திருந்தனர்.