சாத்தூர் : சாத்தூர் படந்தால் ஒற்றைபனைமரம் முனிஸ்வரர் கோவில் பொங்கல் விழா நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கி நாள் தோறும் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பிப்., 19 தேதி இரவு, வசந்தம்நகர், தென்றல்நகர், முத்துராமலிங்கபுரம், குருலிங்கபுரம், மருதுபாண்டியர் நகர் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கலை நிகழ்ச்சி நடந்தது. இரவு கரகம் எடுத்து சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. அன்னதானம், வழங்கப்பட்டது.