தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் காப்பு கட்டிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2019 12:02
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழாவையொட்டி அக்னிசட்டி, காவடி எடுக்கும் பக்தர்கள் காப்புக் கட்டினர்.
இக்கோயில் மஞ்சளாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மூலஸ்தானம் திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை செய்யப்படுகிறது. இக்கோயிலில் மாசி சிவராத்திரி திருவிழா மார்ச் 4 ல் துவங்கி மார்ச் 8 வரை நடக்கிறது. அதையொட்டி அக்னி சட்டி, காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள், விரதம் இருக்க நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் காப்பு கட்டினர். பூசாரிகள் இதற்கான பணியில் ஈடுபட்டனர்.