பதிவு செய்த நாள்
23
பிப்
2019
12:02
கிருஷ்ணகிரி: ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி திருக்கல்யாணம், நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, சின்னமட்டாரப்பள்ளி ராஜுமலை கோவிந்தராஜுலு சுவாமி, 45ம் ஆண்டு திருக்கல்யாண விழா, கடந்த, 18ல் மாலை, விஜய விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 19ல் கருட வாகன உற்சவமும், 20ல் சஷே வாகன உற்சவமும், 21ல் குதிரை வாகன உற்சவமும் நடந்தது. நேற்று பகல், 12:00 மணிக்கு, கோவிந்தராஜுலு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இரவு ரத உற்சவமும், இன்னிசைக் கச்சேரி நடந்தது. இன்று, யானை வாகனத்தில் உற்சவம் நடக்கிறது. நாளை வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.