பதிவு செய்த நாள்
25
பிப்
2019
11:02
மாமல்லபுரம் : கேரள மாநில கோவில் வழிபாட்டிற்காக, 108 சிவலிங்கங்கள், மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் வடிக்கப்பட்டன.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அடுத்த, நெய்யாற்றங்கரை, செங்கால் பகுதியில், சிவசக்தி ஷேத்திரம் என்ற கோவில் உள்ளது. இதன் வழிபாட்டிற்காக, நாட்டிலேயே உயரமாக, 60 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.பக்தர்கள், சிவலிங்கத்திற்குள் சென்று, தரிசிக்கும் வகையில், ஆறு நிலைகள் உள்ளன. இந்நிலைகளில், தலா, 18 என, 108 சிறிய சிவலிங்கங்கள், மகா சிவராத்திரி நாளில், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.இதற்காக, மாமல்லபுரம், தனியார் சிற்பக்கூடத்தில், சிவலிங்கங்கள் வடித்து, கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதே கோவிலுக்காக, சில மாதங்களுக்கு முன், பல தோற்ற வினாயகர் என, 32 சிலைகள் வடித்ததும் குறிப்பிடத்தக்கது.