நத்தம்: நத்தம் மாரியம்மன் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். கடந்த பிப்.11 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்தனர். சந்தனக்கருப்பு கோயிலில் இருந்து தீர்த்தம் அழைத்து செல்லப்பட்டு பல ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.
அன்று முதல் பக்தர்கள் மஞ்சள்நீர், பால்குடம், அங்க பிரதட்சனம், மாவிளக்கு மற்றும் கரும்பு தொட்டில் எடுத்து அம்மனை தரிசனம் செய்து வந்தனர். முக்கிய நாட்களில் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் நகர்வலம் சென்றார். நேற்று காலை கோயில் முன்பு உள்ள பூக்குழி கண் திறக்கப்பட்டது. இன்று அம்மனுக்கு மஞ்சள் பாவாடை சாற்றப்படுகிறது. நாளை அதிகாலை முதல் அக்னிசட்டி எடுக்கப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பகலில் கழுமர ஏற்றம் நடக்கிறது. தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு, பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது.