உடுமலை: உடுமலை, வரசித்தி விநாயகர் கோவிலில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கென சிறப்பு யாகம் நடந்தது. உடுமலை, காந்தி நகர் வரசித்தி விநாயகர் கோவிலில், நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. கோவிலில் தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, மற்றும் ஹயக்கிரீவர் சுவாமி களுக்கு கல்வி மற்றும் ஆயுளுக்கான ஹோமம் நடந்தது. பூஜையில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், தேர்வுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.