Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலும் வேணும்! தயிரும் வேணும்! சிறியவர் யாருமில்லை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராமனின் கருணை உள்ளம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2012
04:02

தன்னைவிட ராமபக்தியில் சிறந்தவர்கள் வேறு யாருமில்லை என்ற எண்ணம் ஆஞ்சநேயருக்கு உண்டானது. இருந்தாலும், ராமரிடமே இதைக் கேட்டுவிட்டால் முழுமையான சந்தோஷம் என்ற எண்ணத்துடன் துள்ளிக் குதித்தோடினார்.  சுவாமி! ராமபக்தியில் சிறந்தவர் யார் என்று சொல்லுங்களேன் என்று ராமரிடம் கேட்டார்.  இதிலென்ன சந்தேகம். சீதாதேவி தான்! அவள் தான் என் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருக்கிறாள், என்று பதிலளித்தார். ஆஞ்சநேயருக்கு தூக்கி வாரிப்போட்டது. சிலையாக நின்றுவிட்டார். அவரது மவுனத்தைக் கண்ட ராமர், ஆஞ்சநேயா! நான் நலமாக வாழவேண்டும் என்று அவள் தானே அனுதினமும் நெற்றியில் செந்தூரத் திலகம் இடுகிறாள், என்று விளக்கம் கொடுத்தார். அவ்வளவுதான்! ராமர் நலமோடு இருக்க வேண்டும் என்பதற்காகமேனி முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டு வந்து நின்றார் ஆஞ்சநேயர். இதைக் கண்ட ராமன் நெக்குருகி, ஆஞ்சநேயா! உன்னை விட எனது பக்தியில் சிறந்தவர் வேறு யாருமில்லை, என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்த நாடகமாடினேன், என அன்போடு சொல்லி மார்புடன் அணைத்துக் கொண்டார்.  இந்நிகழ்ச்சியின் அடிப்படையிலேயே, ஆஞ்சநேயர் கோயிலில் செந்தூரம் பிரசாதமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

மகிழ்ச்சி நிலைக்க.. செப்டம்பர் 25,2026

கணவருக்கான தேவைகளையும், வீட்டை பராமரிப்பதிலும்  அக்கறை கொண்டவர் ஆயிஷா. இவரைப் போலவே பெண்கள் இருக்க ... மேலும்
 

நலமாக வாழ... செப்டம்பர் 25,2026

* விட்டுக்கொடு. நலமாக வாழலாம். * தான் பட்ட கடனை அடைப்பதற்கு, எதுவும் விட்டு வைக்காமல் மரணிப்பது ... மேலும்
 

பாவ மன்னிப்பு செப்டம்பர் 25,2026

‘‘மக்களே! பாவ மன்னிப்பு கோருங்கள். ஏனெனில் தினமும் அவனிடம் நான் நுாறு முறை பாவ மன்னிப்பு கோருகிறேன்’ ... மேலும்
 

வேண்டாமே... செப்டம்பர் 25,2026

* நம்பிக்கை துரோகம் * பொய் பேசுதல்* வாக்கை மீறுதல்  * நேர்மை ... மேலும்
 

இரக்கம் காட்டுங்கள் செப்டம்பர் 25,2026

* பசிப்போர் மீது இரக்கம் காட்டுங்கள்.* நோயோ, துன்பமோ ஒருவன் செய்த பாவத்தால் தான் உண்டாகின்றன. * நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar