பொதுவாக விநாயகருக்கு ஆடையாக துண்டு, வேஷ்டி, பட்டு அங்கவஸ்திரம் அணிவிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், காட்டுப்புத்தூர் சீலைப்பிள்ளையார் புத்தூர் என்ற ஊரில் இவருக்கு சேலையை வஸ்திரமாக அணிவிக்கிறார்கள். இதனாலேயே இவ்வூருக்கு இப்பெயர் வந்ததாம். இவரை வேண்டிக் கொண்டால் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிச்சயம் என்கிறார்கள்.