பதிவு செய்த நாள்
27
பிப்
2019
11:02
திருத்தணி: திருத்தணி நகராட்சியில், பெண்கள் மழை வேண்டி எல்லையம்மன் கோவிலில், பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
திருத்தணி நகராட்சி, 19வது வார்டில், நேரு நகரில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, 100க்கும் மேற்பட்ட பெண்கள், திருத்தணியில் மழை பெய்ய வேண்டும் என, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மூலவர் அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும், ஒரு யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம் நடந்தது.