பழநி: பழநி முருகன் மலைக்கோயில் பூஜைமுறை குருக்கள் சார்பில், இடும்பன் மலைக்கோயிலில் பக்தர்கள், பொதுமக்கள் நலன் வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மலைக்கோயிலில் 12அடி உயரத்திலுள்ள இடும்பனுக்கு 16வகை அபிஷேகங்கள் செய்து, மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.