பதிவு செய்த நாள்
02
மார்
2019
01:03
மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், வரும் 8ல், தெப்போற்சவம் நடக்கிறது.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவில், பக்தர்களிடம் பிரசித்தி பெற்றது. தமிழக இந்து சமய அறநிலைய, ஆளவந்தார் அறக்கட்டளை குழுக்கோவிலாக, இக்கோவில் விளங்குகிறது.கோவிலில், ஆண்டுதோறும், மாசி மாத இறுதி வெள்ளிக்கிழமை நாளில், தெப்போற்சவம் நடக்கும்.
தற்போது, வரும் 8ல், உற்சவம் நடக்கிறது.இதற்காக, கோவில் நிர்வாகம், கிணற்றிலிருந்து நீர் எடுத்து, குளத்தில் நிரப்பியுள்ளது.
பக்தர்களுக்கு, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், பஸ் இயக்கம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடு களுக்கு, செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., முத்து வடிவேலு, அந்தந்த துறையினருக்கு
அறிவுறுத்தியுள்ளார்.