பதிவு செய்த நாள்
03
மார்
2019
08:03
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலத்தில், நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. பல ஆண்டுகளுக்கு முன், இங்கு கண்டெடுத்த சிவலிங்கத்துடன், விநாயகர், முருகர், நவக்கிரகங்கள் அமைத்து, இப்பகுதியினர் வழிபடுகின்றனர்.தற்போது, லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி என, முப்பெருந்தேவியர், ரத தேரில் வீற்ற சன்னிதி, அரச மரத்தடியில், பொல்லாப்பிள்ளையார் சுதை சிற்பம் என, திருப்பணிகள் மேற்கொண்டனர்.இன்று காலை, 9:00 மணிக்கு, மகா கும்பாபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. கோவில் நிர்வாகி, கு.பொன்னம்பலம், ஏற்பாடுகள் செய்துள்ளார்.