பதிவு செய்த நாள்
04
மார்
2019
01:03
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில்களில், உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழங்கிய காணிக்கை எண்ணப்பட்டது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 5 உண்டியல், வீரராகவப்பெருமாள் கோவிலில், 3 உண்டியல் உள்ளன. நான்கு மாத இடைவெளியில், உண்டியல் திறந்து, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இரண்டு கோவில்களிலும், நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
தேக்கம்பட்டி, வனபத்ர காளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ராமு தலைமையில், உண்டியல் திறக்கப்பட்டன. கோவில் ஆய்வாளர் சண்முகசுந்தரம், செயல் அலுவலர் சங்க சுந்தரேசன், தக்கார் பிரதிநிதி வடிவுக்கரசி ஆகியோர், காணிக்கை எண்ணும் பணியை கண்காணித்தனர். சேவா சங்கத்தினர் கூட்டாக இணைந்து, காணிக்கை எண்ணினர். வீரராகவப்பெருமாள் கோவில் உண்டியலில், 7 லட்சத்து, 14 ஆயிரத்து 963 ரூபாய், 22 கிராம் தங்கம், 228 கிராம் வெள்ளி இருந்தன. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 5 லட்சத்து 84 ஆயிரத்து 891 ரூபாய் ரொக்கம், 15 கிராம் தங்கம்; 67 கிராம் வெள்ளி இருந்தன. கோவில் நிர்வாகத்தினர், உண்டியல் பொருட்களை, வங்கிக்கணக்கில் சேர்த்தனர்.