திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரம்மோற்சவம் நிறைவு தேருக்கு கூரை அமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2019 03:03
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பிரம்மோற்சவம் நிறைவடைந்ததை அடுத்து, தேரை பாதுகாக்க, கூரை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி மாதந்தோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தின், ஏழாம் நாள் உற்சவமான தேர் திருவிழா, 16ம் தேதி நடந்தது.இதையடுத்து, தேரை பாதுகாக்கும் விதமாக, பணியாட்கள் மூலம், சட்டங்கள் பொருத்தி, கூரை அமைக்கும் பணி, தீவிரமாக நடக்கிறது.