பதிவு செய்த நாள்
04
மார்
2019
03:03
மாமல்லபுரம்: குழிப்பாந்தண்டலம், நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், நேற்று (மார்ச்., 3ல்), கோலாகலமாக நடந்தது.
மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலத்தில், மங்களாம்பிகை உடனுறை நித்ய கல்யாண ஈஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.திருமண தோஷ பரிகார சிறப்பு பெற்ற கோவிலில், சுவாமியை வழிபட்டு வேண்டினால், திருமணம் நடப்பதாக நம்பிக்கை.
தற்போது, முப்பெருந்தேவியரான, லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி தேரில் வீற்ற சன்னிதி, அரச மரத்தடியில், பொல்லாப்பிள்ளையார் அமைக்கப்பட்டன.கடந்த, 1ல், மகா கணபதி, நவக்கிரக ஹோமங்கள், முதல்கால யாக பூஜை துவங்கி, நேற்று (மார்ச்., 3ல்) காலை, நான்காம் கால பூஜையைத் தொடர்ந்து, 9:05 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள், சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.
மாலை, பரத நாட்டியம், இரவு, சுவாமி வீதியுலா நடந்தது. 18ம் ஆண்டு, மஹா சிவராத்திரி உற்சவம், இன்று (மார்ச்., 2ல்) நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாகி கு.பொன்னம்பலம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.