நடுவீரப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2019 03:03
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நாளை (6ம் தேதி) 145ம் ஆண்டு மாசி மாத மயான கொள்ளை திருவிழா நடக்கிறது.நடுவீரப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத மயான கொள்ளை திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது.
விழாவை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு கெடில நதிக்கரையிலிருந்து சக்தி கரகம் எடுத்து வந்து கொடியேற்றம் செய்யப்பட்டு விழா துவங்கியது. நேற்று (4ம் தேதி) திங்கள்கிழமை இரவு பூவினால் கப்பறை, இருளன் கப்பறை நடந்து சுவாமி வீதி உலா நடந்தது.இன்று (5ம் தேதி) செவ்வாய்கிழமை மாலை 6:00 மணிக்கு குறத்தி வேடம் கட்டி குறி சொல்லுதல், வள்ளால கண்டன் கோட்டை கட்டும் ஐதீகம், சுவாமி வீதி உலா வரும் போது புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு பால் வார்த்தல் நடக்கிறது. நாளை (6ம் தேதி) புதன்கிழமை மதியம் 3:00 மணிக்கு மயானகொள்ளை திருவிழா நடக்கிறது. அதனை தொடர்ந்து தேரில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 7ம் தேதி காலை அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடந்து, மாலை 5:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பருவத ராஜகுலத்தினர் செய்து வருகின்றனர்.