பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
ராசிபுரம்: ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா, 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றுத்துடன் தொடங்கியது. நேற்று (மார்ச்., 6ல்) காலை, அம்மனுக்கு சக்தி கரகம் ஏந்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து தீ மிதி விழா நடந்தது.
குழந்தைகள், பெண்கள், முதியோர் என, ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (மார்ச்., 8ல்), ராசிபுரம் முத்துகாளிப்பட்டி மயானத்தில் மாசான கொள்ளை பூஜை நடைபெறும். 11ல், அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடக்கவுள்ளது.