பதிவு செய்த நாள்
07
மார்
2019
03:03
ராசிபுரம்: ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மனுக்கு, 108 காய், கனியால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ராசிபுரத்தில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
மாசி அமாவாசையான நேற்று (மார்ச்., 6ல்) அம்மனுக்கு காய், கனி அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களால் வழங்கப்பட்ட கேரட், பூசணி, முள்ளங்கி, தக்காளி, சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்ட, 108 வகையான காய், கனிகளை பயன்படுத்தி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.