நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த வெள்ளக்கல் பட்டியில், மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று (மார்ச்., 6ல்) நடந்தது.
நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., அடுத்த வெள்ளக்கல்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு மாசிமாத தேர்த்திருவிழா கடந்த பிப்ரவரியில், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று (மார்ச்., 6ல்) காலை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, மாலை தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் கோஷமிட்டு தேரை இழுத்து வந்தனர். புதுப்பட்டி மெயின்ரோடு வழியாக வந்த தேர் மாலை, 6:00 மணிக்கு நிலைக்கு சென்றது.