பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
எலச்சிபாளையம்: கணபில்பாளையம் ஒண்டிவீரன் சுவாமி கோவிலில், வரும், 10ல் திருவிழா நடக்கிறது.
எலச்சிபாளையம் அடுத்த, கணபில்பாளையத்தில் உள்ள ஒண்டிவீரன், முத்துசுவாமி, கன்னிமார் சுவாமிகளுக்கு திருவிழா நடப்பதையொட்டி, இன்று (மார்ச்., 8ல்) இரவு, 7:00 மணிக்கு சங்ககிரி ஒருக்காமலை சென்று புனிததீர்த்தம் மற்றும் பிடிமண் எடுத்து வருதல், கன்னிமார் சுவாமிக்கு சிறப்பு பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்குகிறது. நாளை (மார்ச்.,9ல்) காலை, 7.30மணிக்கு கணக்குமடை ஆற்றுக்குசென்று சக்திஅழைத்து, ஒண்டிவீரன் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக, ஆராதனை; 10 அதிகாலை, முத்து சுவாமிக்கு பொங்கல் வைத்து, கிடாவெட்டி, பெரும் பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெறும். இரவு, 7:00 மணிக்கு எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகிலுள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, ஒண்டிவீரன் சுவாமி புஷ்ப ரதத்தில் திருவீதி வருகிறார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.