பதிவு செய்த நாள்
08
மார்
2019
02:03
சேலம்: சேலம், லீபஜார் வர்த்தக சங்க, காளியம்மன் கோவிலில், மாசி திருவிழா, கடந்த, 19ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (மார்ச்., 7ல்) மாலை, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில், திரளான பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மார்ச்., 8ல்) தேர் திருவிழா, மார்ச், 10ல் சத்தாபரணம், 11ல் மஞ்சள் நீராட்டம், 17ல் விடையாற்றி உற்சவம், 18ல் கும்ப பூஜை நடக்கிறது.