முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே பூங்குளத்தான் கோயில், அய்யனார், மாடசாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நள்ளிரவு ஆடுகள் பலியிட்டு காவு கொடுத்தல், சாமி ஆடுதல், பேய் விரட்டுதல், தீபாராதனைகள் நடந்தது. காலையில் பெண்கள் பொங்கலிட்டு நேர்த்திகடன் செலுத்தினர்.
இதேபோன்று முனியன் கோயில் விலக்கு ரோட்டில் உள்ள தர்ம முனிஸ்வரர் கோயிலில் கடா வெட்டி அரிசியுடன் பயறு கலந்த பொது அன்னதானம் நடந்தது. இதே போன்று முதுகுளத்தூர் கண்மாய் கரையில் உள்ள அய்யனார் கோயில், கீரனூர் இருளப்பசாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் குலதெய்வ கோயிகளுக்கு வந்து வழிபட்டனர்.