புதுச்சேரி அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2019 02:03
புதுச்சேரி: புதுச்சேரி மறைமலையடிகள் சாலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் உள்ள அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன் கோவிலில், 18ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நேற்று (மார்ச்., 7ல்) நடந்தது.
இக்கோவிலில் மாசி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை யொட்டி தினமும் காலை, மாலை சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் (மார்ச்., 6ல்) காலை 10.00 மணிக்கு மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வீதியுலா நடந்தது. மாலை 6.00 மணிக்கு வள்ளாலகண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 6ல்) இரவு 8.00 மணிக்கு தேங்காய்திட்டு சுடுகாட்டில் மயானக்கொள்ளை விழா நடந்தது.