பதிவு செய்த நாள்
09
மார்
2019
01:03
குளித்தலை: குளித்தலை அடுத்த, இனுங்கூர் குழுமாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், பெட்டவாய்த்தலை காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். யாக சாலையில் மூன்று கால பூஜை செய்து, நேற்று காலை, 7:45 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், இனுங்கூர், பொய்யாமணி, நல்லூர் பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாக்குழு சார்பில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.