புதுச்சேரி:பள்ளித்தென்னல் ஆதிநாகசக்தி அங்காளியம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா நேற்று நடந்தது.
வில்லியனுார் அருகே உள்ள பள்ளித்தென்னல், தென்றல் நகரில் உள்ள ஆதிநாகசக்தி அங்காளியம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது. அன்று காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8.00 மணிக்கு எல்லை கட்டப்பட்டது. 6ம் தேதி காலை 6.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 7.30 மணிக்கு கொடியேற்றி காப்பு கட்டப்பட்டது.
7ம் தேதி காலை 9.00 மணிக்கு சங்கராபரணி ஆற்றில் இருந்து கபால கரகம் புறப்பாடு, பகல் 12.30 மணிக்கு பாற்சாலை வார்த்தல், மாலை 6.00 மணிக்கு நிஷாசினி கோட்டை அழித்தல், பேச்சியம்மன் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு பள்ளித்தென்னல் சுடுகாட்டில் மயானக்கொள்ளை நடந்தது.நெட்டப்பாக்கம்கல்மண்டபத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் தேதி மதியம் 12;00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 3;00 மணிக்கு மயானக் கொள்ளை விழா நடந்தது.