பதிவு செய்த நாள்
10
மார்
2019
01:03
கொடுமுடி: கொடுமுடி வட்டாரம், சிவகிரியில் இருந்து முத்தூர் செல்லும் சாலையை ஒட்டி, எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா, கடந்த, 8 இரவு, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று, தீர்த்தம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை, 6:00 மணிக்கு, பொங்கல் மாவிளக்கு பூஜையும், காலை 10:00 மணிக்கு, அக்னி கும்ப ஊர்வலமும் நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.