பதிவு செய்த நாள்
11
மார்
2019
12:03
அன்னுார்: காக்காபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.காக்கபாளையத்தில், பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த செல்வ விநாயகர் கோவிலில், புதிதாக, கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், மூல கோபுரம், குறிஞ்சி கோபுரம், செல்வ விநாயகர் மற்றும் மாதேஸ்வர சுவாமி கோவில் பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது.
இதையடுத்து, கும்பாபிஷேக விழாவில், 8ம் தேதி கணபதி ேஹாமமும், புனித தீர்த்தம் எடுத்து வருதலும், முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது. 9ம் தேதி இரண்டாம், மூன்றாம் கால வேள்வி பூஜை, வாகை குழுவின் பஜனை மற்றும் கோபியர்களின் கோலாட்டம் நடந்தது.நேற்று காலை 7:45 மணிக்கு, செல்வ விநாயகர், லட்சுமி நாராயணன், மாதேஸ்வரசுவாமி உள்ளிட்ட மூல தெய்வங்களுக்கும், விமானங்களுக்கும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.காலையில் செண்டை மேளமும், நகைச்சுவை சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.