காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி – பங்குனி விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தக்குடமும், 108 பால்குடமும் முத்துாரணி விநாயகர் கோயிலிலிருந்து கோயில் வளாகத்தை வந்தடைந்தது.
பகல் 1:00 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை சுமங்கலி பூஜையும், அஷ்டலெட்சுமி பூஜையும் நடந்தது. சமயபுரம் முத்துமாரியம்மன் அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு வளையல், குங்குமசிமிழ், மஞ்சள், குங்குமம், கண்ணாடி பிரசாதமாக வழங்கப்பட்டது.