மயிலம் முருகர் கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2019 01:03
மயிலம்: மயிலம் முருகர் கோவிலில் இன்று பங்குனி உத்திர பெரு விழா துவங்குகிறது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் பங்குனிகிருத்திகையை முன்னிட்டு இன்று காலை 5;00 மணிக்கு சுவாமிக்குநறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பெரு விழா துவங்குகிறது.பிற்பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில்பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இரவு விநாயகர் விழா, சூரியவிமானத்தில் உற்சவர் கிரிவலம் நடக்கிறது. வரும் 20ம் தேதி புதன் கிழமை காலை 5:45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், மறுநாள் இரவு 12:00 மணிக்கு தெப்பல் உற்சவமும், 22ம்தேதி இரவு 7:00 மணிக்கு முத்துபல்லக்கு உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை மயிலம்பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்துவருகிறார்.