பதிவு செய்த நாள்
12
மார்
2019
01:03
உடுமலை:சோமவாரப்பட்டி கருவண்ணராயர் வீரசுந்தரி கோவில் கும்பாபிஷேகம் நாளை (13ம் தேதி) நடக்கிறது.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், கருவண்ணராயர், வீரசுந்தரி கோவிலில், புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.வளாகத்தில், செல்வகணபதி, சித்திகணபதி, பாலமுருகன், மகாலட்சுமி, முத்துமாரியம்மன், மகாமுனி வேட்டைக்காரர், கருணாமூர்த்தி பரிவாரங்கள் ஆகிய சன்னிதிகளும் அமைக்கப்பட்டன.
விமான மண்டபம், மகாமண்டபம் உட்பட திருப்பணிகளும் நடைபெற்று, கும்பாபிஷேக விழா, யாகசாலை சுபமுகூர்த்த கால் விழாவுடன் துவங்கியது. நேற்று, வாஸ்துபூஜை, பலிதானம் உட்பட பூஜைகள் நடந்தன.இன்று காலை 8:00 மணி முதல், மகாகணபதி ேஹாமம், தனலட்சுமி பூஜை உட்பட பூஜைகள் நடக்கிறது. நாளை, (13ம் தேதி), அதிகாலை, விஷ்வரூப தியானம், இரண்டாம் கால மகாயாகம், விமான கலச கோபுரங்கள் கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 8:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.