திருச்சி: தென் கயிலாயம் என்றழைக்கப்படும், திருச்சி மலைக்கோட்டை, தாயுமானவ சுவாமி கோவிலில், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது, பங்குனி மாதம் 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் மாலை நேரத்தில் சூரிய ஒளி படரும். மலைக்கோட்டைக்கு மேற்கில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்த குளத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் தெப்பத் திருவிழா நடக்கும். அதன் படி, நேற்று காலை கொடியேற்றத்துடன் தெப்பத்திருவிழா துவங்கியது. வரும், 20ல், பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.