வடமதுரை: வடமதுரை சிட்டம்பட்டியில் மாசித்திருவிழா கடந்த மார்ச் 3-ல் அம்மன் சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் மார்ச் 10 வரை மண்டகப்படி, திருவிளக்கு பூஜைகள் நாள்தோறும் நடந்தன. மார்ச் 11ல் அக்கினிச்சட்டிகளுடன் அம்மன் ஊர்வலம், மாவிளக்கு, பொங்கல் பூஜைகள் நடந்தன. பலர் நேர்த்திக்கடனுக்காக கிடா வெட்டினர். முளைப்பாரி, மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கங்கை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவுற்றது. விழா ஏற்பாட்டினை கிராம மக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர்.