பதிவு செய்த நாள்
13
மார்
2019
02:03
பாகூர்: பிள்ளையார்குப்பம் சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், 59ம் ஆண்டு 108 காவடி பூஜை மற்றும் செடல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பத்தில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், 59ம் ஆண்டு 108 காவடி பூஜை மற்றும் செடல் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி, மதியம் ஒரு மணியளவில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து, இன்று 13ம் தேதி விநாயகர் பூஜை, நாளை 14ம் தேதி சக்திவேல் பூஜை, 15ம் வள்ளி தேவசேனா சமேத மூலநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 16ம் தேதி பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 17ம் தேதி வலம்புரிசங்கு அபிஷேகம், 18ம் தேதி 108 சங்காபிஷேகம் நடக்கிறது. வரும் 19ம் தேதி வள்ளி தெய்வானை சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.