பதிவு செய்த நாள்
13
மார்
2019
05:03
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரா கோவிலில் அவரது 424 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புவனகிரி ராகவேந்திரா கோவிலில் அவரது 424 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, காலை 5;00 மணிக்கு சுப்ரபாரதம், ஸ்தோத்திர பாராயணமும், 6;00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகமும், 8;30 மணிக்கு 108 பால்குட ஊர்வலமும், 9;30 மணிக்கு பால்குட அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகமும், மதியம் 1;45 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. 2;00 மணிக்கு பலமந்திராஷ்ஷதை பிரசாதம் மற்றும் அன்னதானமும் நடந்தது. விழாவில், புவனகிரியை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை, நரசிம்மாச்சாரியார், ரகு ஆச்சாரியார், ரமேஷ் ஆச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர். ஏற்பாடுகளை, ராகவேந்திரர் சுவாமிகளின் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், உதயசூரியன், கதிர்வேலு ஆகியோர் செய்திருந்தனர்.