ஆண்டாள் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2019 10:03
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 8:30 மணிக்கு யானை முன்செல்ல மேளதாளத்துடன் கொடிபட்டம் ரதவீதிகளில் பவனி வர காலை 9:15 மணிக்கு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கொடிமரத்தின் முன் சிறப்பு பூஜைகள் நடக்க காலை 9:41 மணிக்கு அனந்தசயன பட்டரால் கொடியேற்றப்பட்டது. ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு நடந்த சிறப்பு பூஜையில் மணவாளமாமுனிகள் சடகோபராமானுஜ ஜீயர், வேதபிரான் அனந்தராமன், அரையர் முகுந்தன், சுதர்சன், மணியம் கோபி, ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் பட்டர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதி உலா நடக்கிறது. ஒன்பதாம் நாளான மார்ச் 21 காலை 7:35 மணிக்கு செப்புத்தேரோட்டம், மாலை 6:40 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மார்ச் 25ல் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் நடக்கும் புஷ்பயாகத்துடன் திருக்கல்யாண உற்ஸவம் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்துள்ளனர்.