பதிவு செய்த நாள்
14
மார்
2019
12:03
வேப்பம்பட்டு: வேப்பம்பட்டு பாண்டுரங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டில், ருக்மணி தாயார் சமேத பாண்டுரங்க பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை கிராம மக்கள் புனரமைப்பு செய்ததையடுத்து, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ருக்மணி தாயார், பாண்டுரங்க பெருமாள், மகாலட்சுமி, யோக நரசிம்மர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருடாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில், கும்பாபிஷேகம் நடந்தது. பின், மஹா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.