பதிவு செய்த நாள்
14
மார்
2019
12:03
உடுமலை: உடுமலை அருகே பூமிலட்சுமியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. உடுமலை குறிஞ்சேரியில் பழமை வாய்ந்த பூமிலட்சுமியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலை, முழுமையாக புதுப்பித்து, கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சுற்றுப்பகுதியைச்சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். இதே போல், சோமவாரப்பட்டி கிராமத்தில், கருவண்ணராயர், வீரசுந்தரி கோவிலும், வளாகத்தில், செல்வகணபதி, சித்திகணபதி, பாலமுருகன், மகாலட்சுமி, முத்துமாரியம்மன், மகாமுனி வேட்டைக்காரர், கருணாமூர்த்தி பரிவாரங்கள் ஆகிய சன்னிதிகளும் அமைக்கப்பட்டன. கோவில், விமான மண்டபம், மகாமண்டபம் உட்பட திருப்பணிகளும் நிறைவு பெற்று, நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.