பதிவு செய்த நாள்
14
மார்
2019
01:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று (மார்ச்., 13ல்), பெருமாள் யாளி வாகனத்தில் வீதியுலா நடந்தது. திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான நேற்று (மார்ச்., 13ல்) காலை, தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.காலை 10:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு 9:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் வாணவேடிக்கையுடன் பெருமாள் வீதியுலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 18ம் தேதி மாலை திருக்கல்யாண வைபவமும், 20ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச் சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.