கச்சிராயபாளையம் தியாகபாடி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2019 01:03
கச்சிராயபாளையம்: கோமுகி அணை அருகே உள்ள தியாகபாடி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று (மார்ச்., 13ல்) நடந்தது.
கச்சிராயபாளையம் அடுத்த கோமுகி அணை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ தியாகபாடி அம்மன் கோவில் உள்ளது. இங்கு புதிதாக கோபுரம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் கும்பாபி ஷேக விழா நேற்று (மார்ச்., 13ல்) நடந்தது.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (மார்ச்., 12ல்)காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்த்துசாந்தி, மகா கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து மாலை, முதல் கால யாகசாலை பூஜையும்; நேற்று (மார்ச்., 13ல்)காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.