பதிவு செய்த நாள்
15
மார்
2019
12:03
சென்னை:சங்கரா அரங்கில், ஆன்மிக பொருட்களின் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வ ஆன்மிக சேவை அமைப்பின் சார்பில், ஆன்மிக, பூஜைப் பொருட்கள் அடங்கிய கண்காட்சியை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கரா அரங்கில் துவக்கி உள்ளது.இந்த கண்காட்சியில், 1,008 பான லிங்கங்களால் வடிவமைக்கப்பட்ட சகஸ்ர லிங்கம், ரூபி கல்லா வடிவமைக்கப்பட்ட கணேசா சிலை, ஒன்று முதல், 21 முகங்கள் கொண்ட ருத்திராட்சங்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியை முன்னிட்டு, ஜோதிட சாஸ்திர வல்லுனர்களை வைத்து பார்வையாளர் களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், பூஜை வழிபாடு, ராசி கற்கள் அணிவது உள்ளிட்ட இலவச ஆலோசனை வழங்கப்படுகின்றன.மேலும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, கங்கையின் புனித நீர் வழங்கப்படுகிறது. மார்ச் 27ம் தேதி வரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை, 10:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.