பதிவு செய்த நாள்
15
மார்
2019
12:03
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லுாரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் தேர் திருவிழா வரும், 19ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு தெற்கு வீதியில் கிராமசாந்தியும், 11:00 மணிக்கு கொடியேற்றமும் நடந்தன.
தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். 17ம் தேதி மாலை, 4:30 மணிக்கு மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல், பக்தர்கள் வசந்தம் பொங்கல் வைத்து வழிபடுதல். 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல், 19ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை 3:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 23ம் தேதி மஞ்சள் நீர் தரிசனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், 10க்கு மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் டேங்க் வைத்து குடிநீர் வசதி ஏற்படுத்துவது, மொபைல் டாய்லெட் அமைப்பது, பக்தர்கள் பாதுகாப்பு கருதி, 50 சிசி.டி.வி கேமரா பொருத்துவது, மூன்று இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது. உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.