மதுரை: மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பசலி உற்ஸவம் மார்ச் 28 முதல் ஏப்.,6 வரை நடக்கிறது.
மாரியம்மன் மார்ச் 27ல் கோயிலிலிருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளி இரவு தங்கி மார்ச் 28 ல் மாலை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி மாரியம்மன் கோயில் சென்றடையும். பின் கொடியேற்றம் முடிந்து உற்ஸவம் துவங்கும். ரத உற்ஸவம் ஏப்.,5 ல் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.