செம்பை பார்த்தசாரதி கோவிலில் சங்கீத உற்சவம் நாளை துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 11:03
பாலக்காடு : செம்பை பார்த்தசாரதி கோவிலில், 98-வது ஏகாதசி திருவிழாவையொட்டி சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது. ஏகாதசி திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்று உற்சவ விழா செம்பை பார்த்தசாரதி கோவிலில் நேற்று நடந்தது. அண்டலாடி சங்கரன் நம்பூதிரிபாடு தலைமை வகித்தார். செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஒருவார காலத்துக்கு ஏகாதசி உற்சவ விழா நடைபெறும். இவ்விழாவையொட்டி. சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும். அன்றாடம் ஒவ்வொரு உற்சவமும் நடைபெறும். புகழ் பெற்ற இந்நிகழ்வில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களும், முன்னணி இசைக் கலைஞர்களும் இசை அபிமானிகளும் பங்கேற்கின்றனர்.
சங்கீத உற்சவம் மார்ச் 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெறுகிறது. மார்ச் 3 ம் தேதி நடைபெறும் சங்கீத உற்சவத்தில், காலை 11.00 மணிக்கு குருவாயூர் தேவஸ்தான செயலர் டி.வி. சந்திரமோகன் சங்கீத உற்சவத்தை துவக்கி வைக்கிறார். சங்கீத நாடக அகாடமி செயலர் டாக்டர் கிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். பிஜு எம்.பி. முக்கிய விருந்தினராகப் பங்கேற்கிறார். பத்மபூஷன் விருது கிடைத்த கோபாலகிருஷ்ணனை பாராட்டும் நிழ்வும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.