கச்சத்தீவில் அந்தோணியார் விழா: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மார் 2012 11:03
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் விழாவை முன்னிட்டு நாளை முதல் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவில் அந்தோணியார் சர்ச் விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் பங்கேற்க அடையாள அட்டை கேட்டு 4,000க்கும் மேற்பட்டோர் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் பயணம் செய்யும் படகுகளின் தரம், பதிவு ஆவணங்கள் குறித்து மீன்வளம் மற்றும் புலனாய்வுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு படகில் ஐந்து ஊழியர்கள் உட்பட 40 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களுக்கு "லைப் ஜாக்கெட் வழங்கப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் நாளை புறபட்டு மார்ச் 4ல் திரும்புகின்றனர். எனவே, இந்த இரண்டு நாட்கள் தனுஷ்கோடியில் இருந்து புதுக்கோட்டை வரை பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீனவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.