பதிவு செய்த நாள்
16
மார்
2019
01:03
உடுமலை: மடத்துக்குளம் பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், வரும் 20ம் தேதி மாலையில், கொடுமுடி தீர்த்த காவடிகள் வலம் வருதல் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, 16 திருமஞ்சன நீராட்டம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம், இரவு 8:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.மறையூர், அஞ்சுநாடு பகுதி, சிங்காரவேலன் கோவிலில், வரும் 20ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு, பாலமுருகன் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி காலை, 7:30 மணிக்கு, கோவில் கடவு தென்காசி நாதன் கோவிலிருந்து, பால் காவடி, தீர்த்தக்குடம் எடுத்து வருகின்றனர்.காலை, 8:00 மணிக்கு, கணபதி ஹோமத்தை தொடர்ந்து புஷ்ப அலங்காரம் நடக்கிறது.