Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வால்பாறையில், சாய்பாபா படம் திறப்பு ... உடுமலை பங்குனி உத்திர திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டூர் மாகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2019
01:03

கோட்டூர்:கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோட்டூர், பழனியூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, 8ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. கடந்த, 13ம் தேதி மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.

அன்று மாலை, பூவோடு எடுத்து பக்தியுடன் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.நேற்று முன்தினம் (மார்ச்., 14ல்) மதியம், 12:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், இரவு, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல் மற்றும் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மார்ச்., 15ல்) காலை, 8:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், கோட்டூர், பழனியூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆண்கள் குண்டம் இறங்கி முடிந்ததும், பெண்கள் தாயே பராசக்தி, அம்மா பராசக்தி என சப்தமிட்டபடி, குண்டத்தில் இருந்த பூவை அள்ளிக்கொடுத்து வழிபட்டனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.குண்டம் நிகழ்வு முடிந்ததும், பக்தர்கள் கோவிலில் இருந்து, தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கோட்டூர் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று, (16ம் தேதி)காலை, 9:00 மணிக்கு தேர் திருவீதி உலா, மஞ்சள் நீராடுதல், இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar